வேலுமணியை தொடர்ந்து கே.சி.வீரமணி..அறப்போர் இயக்கம் வழங்கிய லிஸ்ட்..

வேலுமணியை தொடர்ந்து கே.சி.வீரமணி.. மேலஊழல் புகார் கொடுத்த அறப்போர் இயக்கம் இது தான் இப்ப பரபரப்பா போய்க்கிட்டிருக்கு

: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிமேல 76.75 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார்ங்கிற புகாரை, ஆதாரங்களோட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளது அறப்போர் இயக்கம்.

சமீபத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமானஇடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
அவருக்கு எதிரான புகார்களையும் அறப்போர் இயக்கம்தான் வெளியிட்டு இருந்தது. அந்த அடிப்படையில் தான், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, வேலுமணி அந்த வழக்கில் ஏ-1 ஆகச் சேர்க்கப்பட்டார்.இந்த நிலையில் கே.சி.வீரமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் புகார் பதிவு செய்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி, தனது சகோதரர் அன்பரசன் மற்றும் அ.தி.மு.கவின் `நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளரான சந்திரசேகருக்குச் சொந்தமான கே.சி.பி இன்ஜீனியர்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்த நிறுவனத்தில் இன்னொரு இயக்குநராக உள்ள சந்திரபிரகாஷ், அவருக்கு நெருக்கமாக உள்ள சில நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கினாங்கங்கிறதுதான் அறப்போர் இயக்க குற்றச்சாட்டு. அதில் குறிப்பிட்ட ஒவ்வொருவருக்கு எதிராகவும், ரெய்டுகள் நடந்தது.

இந்த நிலையில்,

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மேல ரூ 76.65 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேத்ததா அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பியிருக்குது

முன்னாள் அமைச்சர் கே. சி . வீரமணி 2011 முதல் 2021 வரை பொது ஊழியராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில், அவரோட வருமானத்திற்கு அதிகமாக ரூ 76.65 கோடி சொத்துக்களை சேத்திருக்காருன்னு அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரிவிச்சிருக்குது . அதுக்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்திடுச்சி.

கே.சி.வீரமணி 2011 முதல் 2021 வரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் 2016 முதல் 2021 வரை வணிகவரித்துறை  பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தாரு. அதுக்கு முன்னால 2013 முதல் 2016 வரை கல்வித்துறை, விளையாட்டு துறை, தமிழ் மொழி கலாச்சாரம் துறை மற்றும் சுகாதார துறை போன்ற துறைகளின் அமைச்சராக இருந்திருக்காரு.

2011 ல் கே. சி. வீரமணி அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள நிகர சொத்து ரூ 7.48 கோடின்னு சட்டமன்ற தேர்தலில்! தெரிவிச்சிருந்தாரு. ஆனா 2011 முதல் 2021 வரை அவரு அவரோட குடும்பத்தார் வாங்கியுள்ள/ சேர்த்துள்ள சொத்தின் மதிப்பு ரூ 91.2 கோடியாகும்.

Additional Assets accumulated during the Check period 2011 to 2021

S.No Name Type of Assets Value (Rs)
1 K.C.Veeramani Movable Rs 43,06,27,147
Immovable Rs 15,74,35,980
2 K.A.Palani&R.S.Educational and Charitable Trust Immovable Rs 92,21,593
3 Home Designers & Fabricators Pvt Ltd (Hotel Hills – Hosur) Immovable Rs 15,00,00,000
4 VBR Hill Properties Immovable Rs 7,10,00,000
5 Hotel Hills Tirupattur Immovable Rs 6,00,00,000
6 Akalya/ Padmasini Movable Rs 3,21,24,067
Immovable Rs 15,90,700
Total Rs91,19,99,487

 

2011 முதல் 2021 வரை அவர் வாங்கிய கடன்களை கழிச்சா அவர் சேர்த்த நிகர சொத்து ரூ 83.65 கோடி ஆகும். கடந்த 10 வருஷத்தில் அவரது வருமானம் மூலம் சேமிப்பு செஞ்சிருந்தா அதிகபட்சமாக ரூ 7 கோடி தான்வரும் .அவர் கடந்த பத்து வருஷத்தில அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து ரூ 76.65 கோடி ஆகும்.

இந்த சொத்தை கணக்கிடும் போது நாம் பெரும்பாலும் அவர் சொத்தை வாங்கிய விலையாக பதிவுத்துறையில் தெரிவித்திருந்தையே கணக்கு பண்ணியிருக்கோம். பெரும்பாலும் இவை அப்போதைய அரசு நிரணயித்த (Guideline) மதிப்பை விட மிகக் குறைவாக காட்டப்பட்டுள்ளது. இவரே பதிவுத்துறை அமைச்சராகவும் இருந்ததுனால இவர் துறையிலேயே அதிகாரிகளுடன்  சேர்ந்து விலையை குறைத்து மதிப்பீடு செய்து மோசடியும் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்திருக்குது. இப்போ விசாரணையில் இவரது உண்மையான வாங்கிய விலையை கணக்கீடு செஞ்சா இங்கு சொல்லப்பட்ட தொகையை விட அது பல கோடி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அது அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி கணக்கிடணும்னு அறப்போர் இயக்கம் சொல்றாங்க.

முன்னாள் அமைச்சர் வீரமணியோட பெயரில் உள்ள அசையும் சொத்துக்கள் மட்டுமே கடந்த 10 வருஷத்தில ரூ 43 கோடி அதிகமாகி இருக்குது. அவரோட பெயரிலும் குடும்பத்தாரோட பெயரிலும் பல அசையா சொத்துக்கள வாங்கிப் போட்டிருக்காங்க.
பெங்களூர், சென்னை, திருப்பத்தூர் னு பல இடங்களில் கடந்த 10 வருஷத்தில அசையா சொத்துக்கள் வாங்கி இருக்காரு.ஹோசூர் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் லீசுக்காக 99 ஆண்டுகளுக்கு வாங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் ரூ 100 க்கு 0.1 ஏக்கர் நிலம் அமைச்சரின் நிறுவனமான ஹோம் டிசைனர்ஸ் அண்ட் ஃபேப்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட் க்கு  2017 ல் சிப்காட்டால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் ரூ 15 கோடி செலவில் ஹோட்டல் ஹோசூர் ஹில்ஸ் கட்டப்பட்டிருக்குது.

மேலும் பல நிலங்கள் முன்னாள் அமைச்சர் தனது தாயார் மணியம்மாள், சகோதரி தன்மானம் சுதா சுஷீலங்கிற பெயரில் வாங்கி அதே நாளிலோ அல்லது சில மாதங்களுக்கு பின்னரோ தன்னுடைய பெயருக்கு தான பத்திரம் மூலம் மாத்தி முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துருக்குது. அப்புறம் அவரோட மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் 2015 ல் வாங்கப்பட்டது ஆனா அதே வருஷம் முன்னாள் அமைச்சரின் ஆர் எஸ் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தானமாக மாற்றிக்கொண்ட ஆதாரத்தையும் இணைச்சு புகார் கொடுத்திருக்காங்க. இப்படி முன்னாள் அமைச்சர் தன் உறவினர்களை பயன்படுத்தி பல கோடி ரூபாய் சேர்த்த ஆதாரங்களையும் இணைச்சு கொடுத்திருக்காங்க.

ஒட்டுமொத்தத்தில் முன்னாள் அமைச்சர் அவர் குடும்பத்தினர் 2011 ல் வெறும் ரூ 7.48 கோடி சொத்தில் இருந்து கடந்த 10 வருஷத்தில் குறைந்த பட்சமாக ரூ 76.65 கோடி வருமானத்திற்கு மீறிய சொத்தை சட்ட விரோதமாக சேத்திருக்காங்க. இதை சரியாக விசாரித்தால் மேலும் பல கோடி ரூபாய் வருமானத்திற்கு மீறிய சொத்து கண்டறிய வாய்ப்புள்ளதுன்னு சொல்றாங்க.

வாணியம்பாடி எம்எல்ஏவாகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். ஆனால், இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அவருக்கு சீட் தரலை. செய்தியாளர்களை சந்தித்த நிலோபர் கபில், கே.சி.வீரமணி, ஏலகிரியில் துரைமுருகனை சந்தித்து கான்ட்ராக்ட் ஒப்பந்தம் பற்றி பேசியிருந்தார். துரைமுருகன் ஜெயிப்பதற்காக காட்பாடியில் ராமுவுக்கு சீட்டு கொடுத்திருக்கிறார். அதற்கு கைமாறாக வீரமணிக்கு எதிராக தேவராஜுக்கு சீட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சரமாரியாக குற்றம்சாட்டியிருந்தார். இப்படி உட்கட்சிக்குள் பஞ்சாயத்துகளை எதிர்கொண்ட வீரமணிக்கு எதிரா இப்போ ஊழல் புகார் விஸ்வரூபம் எடுத்திருக்குதுன்னு சொல்றாங்க.என்ன செய்யப் போறார் வீரமணிங்கிற. பொறுத்திருந்து தான் பாக்கணும்.