பிரேகேட் நிறுவனத்துடன் கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ரியல் எஸ்டேட் துறையில் செயல் திட்டங்களை வகுத்து அளிப்பதற்கான தனி நிறுவனமான பிரேகேட் ரீப் மற்றும் கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சென்னையில் உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் அங்கமாக புதுமை மற்றும் அடைகாப்பு நிறுவனம் உள்ளது. சொத்து மூலதன தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காணொலி வழியாக பிரேகேட் நிறுவனம் விளக்கும். இதுவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாரமாகும். சொத்து மூலதன பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் புதிய ஸ்டார்ட் அப்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ள மனித வள அம்சங்களை கிரசென்ட் நிறுவனம் அளித்திடும்.

சொத்து மூலதன தொழில்நுட்பத் துறையின் முதல் செயல்பாட்டுத் திட்டத்தை பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில்,, ஐக்கிய பொருளாதார அமைப்பின் தலைவரும், கிரெடாய் முன்னாள் தலைவருமான திரு டபிள்யூ.எஸ்.ஹபீப், பிரேகேட் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் திரு. ஜான் குருவில்லா, கிரசென்ட் கல்வி நிறுவனத்தின் வேந்தர் திரு ஆரிப் புகாரி ரகுமான், இணை வேந்தர் திரு. அப்துல் காதிர் அப்துல் ரகுமான் புகாரி,  சிஐஐசி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு எம்.பர்வேஷ் ஆலம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, பிரேகேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிருபா சங்கர் கூறியது:-
இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையானது 2030-ஆம் ஆண்டுக்குள் 1 ட்ரிலியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் துறையானது 13 சதவீத பங்குகளை வகிக்கும். வேகமான வளர்ச்சி, நடுத்தர பொருளாதாரம் கொண்ட இளம் வயதினர் மற்றும் வேகமாக வளரும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றால் நகர்ப்புற மயமாக்கல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் சொத்து மூலதன தொழில்நுட்பம் என்ற துறைக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. எனவே, அந்தத் துறையிலுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இப்போது அடையாளம் காண்பது சரியான தருணம் என்று கருதுகிறோம். அந்த நிறுவனங்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்குவது அந்தத் துறையும் அதுசார்ந்த வணிகமும் மேலும் உயர்வதற்கு வழிவகுக்கும் என்றார்.

கல்வி நிறுவனத்தின் வேந்தர் மற்றும் சிஐஐசி இயக்குநரகளில் ஒருவருமான  ஆரிப் புகாரி ரகுமான் கூறியது:-
கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனமானது தனது புதிய முயற்சிகளை தென் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. தொழில்நுட்பம் ரீதியான ஸ்டார்அப்களுக்குத் தேவைப்படும் சரியான வசதிகள், ஆலோசனைகளை அது வழங்கிடும். இப்போது செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழகத்தில் ஸ்டார்ட் அப் சூழலை மேலும் வலுப்படுத்த வழி ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.

கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் திரு அப்துல் காதிர் அப்துல் புகாரி கூறியது:-
அதிகமான முதலீடுகள் மூலமாக ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தமானது தொத்து மூலதன தொழில்நுட்பத் துறையில் மிகச் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்திடும் என்றார்.புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஓராண்டு காலம் நடைமுறையில் இருக்கும்.

இதுகுறித்து, கிரசென்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் இயக்குநர்  எம்.பர்வேஷ் ஆலம் கூறியது:-
கடந்த 2019-ஆம் ஆண்டிலேயே சொத்து மூலதன தொழில்நுட்பத் துறையில் முதலீட்டின் அளவு 5.4 பில்லியன் டாலரில் இருந்து 8.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது, சொத்து மூலதன தொழில்நுட்ப ஸ்டார்அப்கள் அதிகளவு உருவாவதற்கான சாத்தியக் கூறுகளாகும். புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக ஏராளமான புதிய திட்டங்களும், நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும். சொத்துமூலதன தொழில் நுட்பத் துறையில் சர்வதேச அளவிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவிகளைச் செய்திடும் என்றார்.

 

 

Related posts: