ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ், ஆல்ஃபா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை அலியா பட்!

ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ், ஆல்ஃபா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை அலியா பட்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அலியா பட் இந்த வார தொடக்கத்தில் தனது பெரிய ஆக்‌ஷன் என்டர்டெய்னரான ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் படமான ஆல்ஃபாவில் தனது படப்பிடிப்பைத் தொடங்கினார். ஆல்ஃபாவின் செட்களில் உற்சாகமாக அலியா வலம் வரும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த வீடியோ காட்சிகளில் உள்ள அலியாவின் தோற்றம் படத்திற்கான லுக் அல்ல என்பதை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட செட்டுக்குள் அலியா நடந்து செல்லும் போது வெகு தொலைவில் இருந்து கிளிக் செய்யப்பட்டார்.

ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படமான ஆல்ஃபாவில் முதன்மை பெண் கதாபாத்திரமாக, சூப்பர் ஏஜென்டாக ஷிவ் ராவைல் இயக்கத்தில் அலியா பட் நடிக்கிறார். ஷிவ் ராவைல் இதற்கு முன்பு ஒய்ஆர்எஃப் யுனிவர்ஸை உலகளாவிய அளவில் வெற்றியடைய செய்தார். மேலும், பெரும் சோகத்தை ஏற்படுத்திய போபால் வாயு கசிவு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு நெட்ஃபிலிக்ஸில் ​​’தி ரயில்வே மென்’ தொடரை எடுத்து கவனம் ஈர்த்தார்.

தி ஒய்ஆர்எஃப் ஸ்பைவர்ஸ் இதுவரை ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் & டைகர் 3 போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளது. ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸில் இருந்து தற்போது தயாரிப்பில் உள்ள மற்றொரு படம் ஹிருத்திக் ரோஷன் & ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘வார்2’ ஆகும்.

Related posts:

”’பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”- நடிகர் மிர்ச்சி சிவா!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamil Film Active Producers Association) தலைவராக‘சத்ய ஜோதி’ T.G. தியாகராஜன்,  ஒரு மனதாக தேர்வு.!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

ஹாலிவுட் நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் விருஷபா படத்தில் இணைந்துள்ளார் !!

நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன்.! வசந்த் ரவி !!

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்!