கொரோனா வைரஸ் பாரபட்சம் இல்லாமல் பலரையும் பாதித்து இருக்கிறது.இதில் பாதிக்கப்படாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வங்கியில் நிம்மதியாக ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) போட்டு வைத்துக் கொண்டு, அதில் இருந்து வரும் வட்டி வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தவர்கள் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சொல்லலாம். இப்போது அவர்கள் எங்கு எந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.
கை கொடுக்கும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்! பங்குச் சந்தை சொதப்பினாலும் பரவாயில்லை! ஒப்பீடுகள் எஸ்பிஐ வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழ் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (Fixed Deposit) கொடுத்திருக்கும் வட்டி விகிதங்களை, அதே 2 கோடி ரூபாய்க்கு ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் என்ன வட்டி விகிதங்கள் கொடுக்கிறார்கள் என ஒப்பிடப் போகிறோம்.இந்த வட்டி விகிதங்கள் 60 வயதுக்கு உட்பட்ட சாதாரண குடிமகன்களுக்கு மட்டுமே பொருந்தும். மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்களை இதில் ஒப்பிடவில்லை. வட்டிக் குறைப்பு இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடந்த 28 மார்ச் 2020 அன்று தான் தன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான (FD) வட்டி விகிதங்களைக் குறைத்தது. அதே போல ஹெச்டிஎஃப்சி வங்கியும் கடந்த 18 மார்ச் 2020 அன்று தான் தன் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள். ஆக்ஸிஸ் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 2 ஏப்ரல் 2020 நிலவரப்படி கொடுத்து இருக்கிறோம் எனச் சொல்கிறார்கள். ஆனால் அந்த லிங்கை சொடுக்கினால் 18-02-2020 அன்றைய வட்டி விகிதங்கள் தான் வருகின்றன. ஆனால் URL லிங்கில் 02-04-2020 அன்றைக்கான தேதி தான் இருக்கிறது.எனவே அது ஆக்ஸிஸ் வங்கியின் புதிய வட்டி விகிதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். 1 – 2 வருடம் FD Interest rate எஸ்பிஐ 1 – 2 வருடத்துக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு (Fixed Deposit) புதிய வட்டி விகிதங்கள் படி 5.7 % தான் வட்டி கொடுக்கிறார்கள்.
ஆனால் ஹெச் டி எஃப் சி வங்கி தன் 1 – 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (Fixed Deposit) 6.15 % வட்டி கொடுக்கிறார்கள். ஆக்ஸிஸ் வங்கியோ 6.40 – 6.50 % வட்டி கொடுக்கிறார்கள். 2 – 3 வருடங்கள் FD Interest rate இதிலும் ஆக்ஸிஸ் வங்கி தான் அதிகம் வட்டி கொடுக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி 2 – 3 வருடம் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.50 % வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் ஹெச் டி எஃப் சி வங்கி 6.25 % தான் வட்டி கொடுக்கிறார்கள். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதை விட மிகக் குறைவாக 5.70 % தான் வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 3 – 10 வருடம் FD Interest rate இந்த நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களான 3 – 10 வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களுக்கு, ஆக்ஸிஸ் வங்கி 6.50 % வட்டி கொடுக்கிறது. ஆனால் ஹெச் டி எஃப்சி வங்கி 6.15 % தான் வட்டி கொடுக்கிறது. எஸ்பிஐ தரை தட்டும் விதத்தில் 5.7 சதவிகிதம் தான் வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தேர்வு செய்யுங்கள் ஆக எது அதிக வட்டி கொடுக்கிறது என்பதை நாங்கள் ஒப்பிட்டுச் சொல்லிவிட்டோம். இப்போது எந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால் உங்களுக்கு எவ்வளவு ஆண்டு வருமானம் வரும் என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல வருமானம் கொடுக்கக் கூடிய FD திட்டங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.