இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் ஒடிஒ கேபிடல் நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்காக சென்னையில் தனது புதிய கிளையைத் திறந்துள்ளது. அனைத்து முக்கிய பிராண்டுகள் மற்றும் மாதிரிகளிலிருந்து இரு சக்கர வாகனங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு ஒடிஒ கேபிடல் உதவுகிறது. இஎம்ஐகளை விட சுமார் 30% குறைவான ஒஎம்ஐகள் (மாதாந்திர உரிமையாளர் தவணைகள்) மிகவும் குறைந்த திரும்பக்கிடைக்கும் முன்பணத் தொகையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சந்தையில் தனது வியாபாரத்தைத் தொடங்கிய ஒடிஒ கேபிடல் நிறுவனம் நகரத்திலுள்ள சுமார் 30 க்கும் மேலான டீலர்களுடன் இணைந்து செயல்பட்டு, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தனது சேவைகளை வழங்கும். இந்நிறுவனம் 2021 ஆண்டின் இறுதிக்குள் சுமார் 75 டீலர்களுடன் 3000 க்கும் மேற்பட்ட இரு-சக்கர வாகனங்களை குத்தகைக்கு விடும் நோக்கம் கொண்டுள்ளது. 2021 மார்ச் மாதம் முதல் வீட்டிலேயே சோதனைச் சவாரிகள் மற்றும் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யும் வசதிகளை ஒடிஒ செயலாக்கவுள்ளது. இந்நிறுவனம் விரைவிலேயே மதுரை மற்றும் கோவையிலும் விரிவாக்கம் செய்யும்.
கடந்த 4 வாரங்களிலேயே நகரம் முழுவதிலுமிருந்து சுமார் 3000 த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து ஒடிஒ கேபிடல் நிறுவனத்திற்கு முன்பதிவு கோரிக்கைகள் வந்து பெரிதளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. 30க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் கூட்டிணைந்துள்ள இந்நிறுவனம், 2021 பிப்ரவரியில் 20 பதிவுகளுக்கு விநியோகம் செய்துள்ளது. சென்னையில் இருக்கும் முக்கிய விநியோகஸ்தர்களான ஜெஎஸ்பி ஹோண்டா, மோஹன்ன ஹீரோ, பைகர்ஸ் யமாஹா, ப்ரில்லியண்ட் டிவிஎஸ், ஸ்ரீ ராஜ் பஜாஜ், அத்யுக் சுசுகி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆர்இ, எஸ்எஸ்ஆர் மோட்டார்ஸ், வர்த்தமான் யமாஹா, ஸ்ரீ வர்த்தமான் வெஸ்பா மற்றும் பலருடன் இணைந்துள்ளது.
சென்னையைச் சார்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒடிஒ நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைனில் வாங்கும் வசதி இப்போது நேரடியாகக் கிடைக்கிறது. சென்னையில் இருக்கும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள் ஒடிஒ-வின் இணையதளத்தைத் திறந்து, தங்களுக்குத் தேவையான வாகன மற்றும் உகந்த திட்டங்களைத் தேர்வு செய்து 100% ஆன்லைலிலேயே தங்கள் விவரங்களை முழுமையாகத் தெரிவித்து விண்ணப்பிக்கலாம். ஒப்புதல் கிடைத்த பிறகு வாங்குபவர்கள் புக்கிங்கை உறுதி செய்யலாம், இரு சக்கர வாகனத்தைப் பெற்றுக்கொள்ள அருகிலுள்ள ஷோரூமை ஓடிஓ நிறுவனம் ஒதுக்கிக் கொடுக்கும். இணைப்பில் உள்ள ஷோரூம்களின் நிர்வாகிகளுக்கு ஓடிஓ கேபிடல் நிறுவனத்தின் எல்எம்எஸ் ஆப் மூலமாக பயனாளர்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு பயனர், ஷோரூமுக்கு வருகை தந்த பின் இந்த மொபைல் ஆப் மூலமாக மற்ற ஏற்பாடுகள் பூர்த்தி செய்துத் தரப்படும். இந்த செயற்பாட்டின் மூலம் ஓடிஓ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அன்றைய தினமே விநியோகம் செய்ய ஏதுவாகிறது. இதைத் தவிர, ஓடிஓ எல்எம்எஸ் மொபைல் ஆப் மூலம் நிர்வாகிகள் தங்கள் திட்டங்களைப் பகிர்வதுடன் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கான கேஒய்சி செயல்முறையையும் தாமே செய்து கொள்ள முடியும்.
தற்போது ஓடிஓ நிறுவனத்தின் சேவை சுமார் 110 க்கும் மேலான டீலர்களுடன் பெங்களூரு, புனே, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் கிடைக்கப் பெறுகிறது. 2020 ஆண்டில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு 400 வாடிக்கையாளர்கள் என ஒவ்வொரு வருடமும் 10 மடங்கு அதிகமாக வளரும் திட்டங்கள் கொண்டுள்ளது. மின் வாகனம் (ஈ.வி) பிரிவில் கூட, அனைத்து முக்கிய பிராண்டுகளுடனும் ஓடிஓ நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்கிறது. ஓடிஓ நிறுவனத்துடன் கூட்டு சேரும் ஹீரோ எலக்ட்ரிக், பியாஜியோ, ஒகினாவா மற்றும் பிற எல்லா பெரிய பிராண்டுகளும் வாங்குபவர்களுக்கு சிறந்த நிதியுதவி அளிக்கும் திட்டங்கள் கொண்டுள்ளன. இன்றைய வாடிக்கையாளர்களுக்கு ஓடிஓ நிறுவனத்தின் லீஸிங் மாடல் தான் மிகவும் மலிவான மற்றும் இணக்கமான மாதிரியாகக் கிடைக்கக்கூடியதாகும். ஓடிஓ உடனான முக்கிய நன்மை என்னவென்றால்ஒரு பாரம்பரிய வங்கி கடன் இஎம்ஐ உடன் ஒப்பிடும்போது, ஓடிஓ மாதாந்திர தவணைகள் (OMI) மூலம் ஒருவர் 30% வரை சேமிக்க முடிந்து வாங்குபவருக்கு உரிமையின் மீது முழுமையான கட்டுப்பாடும் இருக்கும். மேலும் வாகனத்தை 12 மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரைகுத்தகைக்கு எடுக்க தேர்வு செய்து, குத்தகை காலத்தின் முடிவில், ஒருவர் ஓடிஓ இலிருந்து வாகனத்தை திரும்ப வாங்கலாம் அல்லது அவர்கள் விரும்பும் வேறு எந்த வாகனத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம்.
ஜனவரி 2021 இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை தனிப்பட்ட விருப்பத்துடன், டிஜிட்டல் நடைமுறைகளின் மூலம்வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை செய்யும் நோக்கத்த்தில் ஒட்டுமொத்த மீட்புக்கான அறிகுறிகளைக் காணத் தொடங்கியுள்ளது.நீண்ட காலமாக வாகனம் வாங்குவது என்பது நேரடித் தொடர்பு மற்றும் நேரடி விற்பனை முறைகளையே சார்ந்துள்ளது.ஆனால் இப்போது ஓடிஓ கேபிடல் போன்ற முக்கிய ஓஇஎம்கள் தங்கள் வாகனங்களை விளம்பரப்படுத்தமற்றும் வாங்குபவர்களின் கவனத்தைப் பெற தங்கள் ஆன்லைன் தளங்களை மேம்படுத்தத் தொடங்கியுள்ளன. இது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் கடினமானதொரு மாற்றமாகும் மற்றும் ஓடிஓ இவ்வாறான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒரு தடையற்ற செயல்முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
சுமித் சாஜேத், இணை-நிறுவனர், ஓடிஓ கேபிடல்
“சென்னையில் ஓடிஓ நிறுவனம் மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் ஒருவராக இருப்பதால் நாட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு மற்றும் முதல் 10 உலகளாவிய வாகன மையங்களில் ஒன்றாகும். எங்களுக்கு சென்னை மிகவும் முக்கியமானதகும், மேலும் இந்நகரத்திலிருந்து வாடிக்கையாளர்கள் எங்கள் சமூக சேனல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஓடிஓ நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பற்றி விசாரிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும், சமீபத்திய பிராண்டுகள் உடனான எங்கள் பங்கு மற்றும் கூட்டாண்மை ஓடிஓ நிறுவனத்தின் சென்னை நகர வாடிக்கையாளர்களிடையே பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. தினசரி 1000+க்கும் மேற்பட்ட விசாரணைகளைப் பெற்றுவரும் ஓடிஓ-வின் டிஜிட்டல் இயங்குதளம், எங்கள் கூட்டாளர்களுக்கான விற்பனையை அதிகரிக்கும். நிதித்தேர்வுகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பெறுவதன் மூலம் எங்கள் விநியோகஸ்தர்களுக்கான தேவை மற்றும் விற்பனையை புதுப்பிக்கப்பட உதவும்.”
வெங்கட்ராமன் எஸ், ஜெஎஸ்பி ஹோண்டா சென்னை
“ஓடிஓ கேபிடல் நிறுவனத்துடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் மற்றும் ஒரு பயனுள்ள ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியின் மிக முக்கியமான உந்துதல்களில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்றாகும் மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலிகளில் அதிக பங்கேற்பு கொண்டதும் ஆகும். மலிவான, எளிதான மற்றும் புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகும் வகையிலான பல நிதி விருப்பங்களை வழங்கும் திட்டங்கள் ஓடிஓ கேபிடல் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிப்பதில் உதவுவதற்கு அவசியமாக இருக்கும். மேலும் வரவிருக்கும் மாதங்களில்எங்களுடன் ஈடுபட்டுச் செயல்பட மென்மேலும் பல வாடிக்கையாளர்களை எதிர்பார்க்கிறோம்.”