Thursday, April 18

WhatsApp குரூப்பை இழக்காமல் Signal App க்கு மாறுவது எப்படி ?

lவாட்ஸ்அப் தளமானது பேஸ்புக் உடன் “தவிர்க்க முடியாத வண்ணம் இணைக்கப்படப் போகிறது”, இந்த மாற்றங்கள் வாட்ஸ்அப்பின் பிஸ்னஸ் பயனர்களுக்கு மட்டுமே என்று வாட்ஸ்அப் “தெளிவுபடுத்தி வருகிறது” என்றாலும் கூட, உண்மையை உரக்க சொல்லவேண்டுமென்றால் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகள் எதுவுமே மிகவும் உறுதியானதாக அல்லது பாதுகாப்பானதாகத் தெரியவில்லை.ஆம், வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவஸி பாலிசிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இழக்க நேரிடும்.
எனவே தான் பெரும்பாலான பயனர்கள், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை பற்றி கூகுள் செய்து வருகின்றன. ஒருவேளை நீங்க; சிக்னல் ஆப்பிற்கு மாற விரும்பினால், அதே சமயம் உங்கள் வாட்ஸ்ஆப் க்ரூப் சாட்களை நீங்கள் இழக்க விரும்பவில்லை என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்அதாவது வாட்ஸ்அப் க்ரூப் சாட்ளை சிக்னலுக்கு நகர்த்துவது எப்படி என்கிற எளிய வழிமுறைகளை பற்றியே நாம் இங்கே பேசப்போகிறோம்.எனவே தான் பெரும்பாலான பயனர்கள், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை பற்றி கூகுள் செய்து வருகின்றன. ஒருவேளை நீங்க; சிக்னல் ஆப்பிற்கு மாற விரும்பினால், அதே சமயம் உங்கள் வாட்ஸ்ஆப் க்ரூப்களை இழக்க விரும்பவில்லை என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்

– முதலில் நீங்கள் சிக்னல் ஆப்பை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.- சிக்னல் ஆப்பை செட்டப் செய்யுங்கள். இதற்கு உங்களின் மொபைல் எண் மட்டுமே தேவைப்படும்.- இப்போது, சிக்னல் ஆப்பிற்குள் நுழைந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைக் கிளிக் செய்து, Action மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.

– பின்னர் New group என்பதை கிளிக் செய்யவும்.

– இப்போது, சிக்னலில் ஒரு க்ரூப்பை உருவாக்க நீங்கள் குறைந்தபட்சம் ஒரு காண்டாக்ட்டையாவது சேர்க்க வேண்டும். குறிப்பிட்ட அல்லது விருப்பமான காண்டாக்டை தேர்வு செய்யவும். பின்னர் செயல்பாட்டை தொடர காணப்படும் “அம்புக்குறி” கிளிக் செய்யவும்.- நீங்கள் உருவாக்கிய க்ரூப்பிற்கு பெயரிட்டு, Create என்பதைக் கிளிக் செய்யவும்.- அடுத்ததாக, உருவாக்கப்பட்ட க்ரூப் விண்டோவிற்குள் மேல் வலது மூலையில் காணப்படும் மூன்று செங்குத்து புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.- பின்னர் ‘Group settings’ என்பதை கிளிக் செய்து அதனை தொடர்ந்து ‘Group link’ என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.- பின்னர் Group link-ற்கான Toggle-ஐ ஆன் செய்யவும். இதை தொடர்ந்து Share என்பதை கிளிக் செய்யவதின் மூல க்ரூப்பை பகிரக்கூடிய இணைப்பொன்றை (Link) பெறுவீர்கள்.

– குறிப்பிட்ட லிங்க்-ஐ காப்பி செய்து உங்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் பகிரவும், அதன் வழியாக நீங்கள் அவர்களை சிக்னல் க்ரூப்பில் இணைய அழைக்கலாம். அதனை பெறுபவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதைக் கிளிக் செய்து ஜாயின் ஆக வேண்டும், அவ்வளவுதான்!

உங்களின் பழைய வாட்ஸ்அப் சாட்களை உங்களால் மீட்டெடுக்க முடியாது என்றாலும் கூட, அந்த க்ரூப்பில் இருக்கும் நண்பர்களையாவது மீட்டெடுக்கலாமே!

Related posts:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *